நடிகர் விஜய் சேதுபதி இப்போது தனது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குரங்கு பொம்மை பட இயக்குநர் நிதிலன் இயக்குகிறார். இதில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் விஜய்சேதுபதி நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திற்கு மகா ராஜா என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.