கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‛லியோ'. நேற்று தான் தன் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகளை விஜய் நிறைவு செய்தார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். சினிமாவில் நடித்து வந்தாலும் மற்றொருபுறம் தன் எதிர்கால அரசியல் பயணம் தொடர்பான விஷயங்களை தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது விஜய் ஆலோசனை செய்து வருகிறார்.
சமீபத்தில் முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாவட்டம் வாரியாக மாலை அணிவிக்க சொல்லி உத்தரவிட்டார். தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து பாராட்டினார். இந்நிலையில் இன்று(ஜூலை 11) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விஜய்யின் பனையூர் இல்லத்தில் இந்த கூட்டம் காலை 9 மணிக்கு மேல் துவங்கியது. தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு விஜய் வருகை தந்தார். தன் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மதிய உணவு விருந்தும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுடன் இணைந்து போட்டோவும் எடுக்கிறார். இன்றைய கூட்டத்தில் 15 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் தொடர்பான விஷயங்கள் இந்த கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தாண்டு பார்லிமென்ட் தேர்தல் நடக்கிறது. இதுபற்றியும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அடுத்தடுத்த ஒவ்வொரு நகர்வுகளும் அரசியல் நோக்கியே பயணிப்பதை வெளிகாட்டுகிறது.