2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
'நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர்,' படங்களின் இயக்குனரான ராஜமவுலி தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 'ஆர்ஆர்ஆர்' படம் முடித்த பின் அப்படத்திற்கான ஆஸ்கர் விருதுப் பணிகளில் பிஸியாக இருந்தார். ஆஸ்கர் விருது வென்ற பின் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள ராஜமவுலி தனது தமிழக சுற்றுப் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
“தமிழகத்தின் மத்தியப் பகுதியில் சாலைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. கோயில்களுக்கு செல்ல விரும்பிய என் மகளுக்காக அதில் இறங்கினோம். ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்கு ஜுன் கடைசி வாரத்தில் சென்றோம். இருந்த சில நாட்களில் பனிப்பாறையின் நுனியை மட்டுமே தொட முடிந்தது. நேர்த்தியான கட்டிடக் கலை, அற்புதமான பொறியியல், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் பல ஆட்சியாளர்களின் ஆழ்ந்த ஆன்மிக சிந்தனை உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில ஊர்களில் அவர் சாப்பிட்டத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, “ஒரு வாரத்தில் 2, 3 கிலோ எடை கூடிவிட்டேன். வெளிநாட்டுப் பயணம், சாப்பாடு ஆகியவற்றில் மூன்று மாதங்கள் போன பிறகு நமது தாய் மண்ணில் சுற்றுப் பயணம் செய்தது புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தந்தது,” என்றும் தெரிவித்துள்ளார்.