எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் |
1995ம் ஆண்டு 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் வனிதா விஜயகுமார், அதன்பிறகு ராஜ்கிரணுடன் நடித்த மாணிக்கம் படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் சினிமாவுக்கு திரும்பி குணசித்தர வேடங்கள், வில்லி வேடங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது 'கடைசி தோட்டா' என்ற படத்தில் ஹீரோயினாக அதுவும் டெரர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆர்.வி.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை நவீன் இயக்குகிறார். அவருடன் ராதாரவி, ஸ்ரீகுமார் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வி.ஆர்.சுவாமிநாதன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மர்டர் மிஸ்ட்ரி ஜார்னரில் படம் தயாராகி வருகிறது. மலைப்பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வனிதா நடிக்கிறார்.