'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கிரிக்கெட் ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி. 'டோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி சினிமா தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். தமிழில் முழுநீள திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
'எல்.ஜி.எம்.' என்ற இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி உள்ளார். ஹரிஷ் கல்யாண் நாயகனாகவும், இவானா நாயகியாகவும் நடித்துள்ளனர். நதியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இயக்குனர் ரமேஷ் தமிழ்மணியே இசை அமைத்தும் உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இதில் கலந்து கொண்டு தோனி பேசியதாவது : சென்னை எனக்கு பிடித்த இடம். எனது கிரிக்கெட் அறிமுகம் இங்குதான் நடந்தது. இங்குதான் அதிக ஸ்கோர் செய்தேன். அளவில்லா அன்பை கொடுத்த ரசிகர்கள் சென்னை ரசிகர்கள், எனது வாழ்க்கையின் பல நல்ல விஷயங்கள் சென்னையில் தான் நடந்தது. அதனால்தான் சாக்ஷி சினிமா தயாரிக்க வேண்டும் என்று சொன்னபோது தமிழ் படம் தயாரிக்க சொன்னேன்.
படத்தின் விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். ஆனால் கதை கேட்பேன், பணிகள் முடிந்ததும் படம் பார்ப்பேன். எனது கருத்தை சொல்வேன் என்றேன். இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. நான் என் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவன். நதியாவின் நடிப்பில் அதை மீண்டும் உணர்ந்தேன். ஹரிஷ், இவானா, யோகிபாபு பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். இது தாய், மகன், மாமியார் உறவை பேசுகிற படம். எல்லோருக்கும் பொருந்துகிற கதை அம்சம் கொண்ட படம். சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் சிறிய பகுதியை திருப்பி கொடுப்பதாக நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.