சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை சமீபத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த நிலையில் இன்று(ஜூலை 11) சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோளையும், அரசுக்கு சில கோரிக்கைகளையும் வைத்துள்ளார்கள்.
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்
1. புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரம் கழித்துதான் ஓடிடியில் திரையிட வேண்டும்.
2. ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகுதான் விளம்பரம் செய்ய வேண்டும்.
3. விளம்பர போஸ்டர்களுக்கு 1 சதவீதம் நீக்க வேண்டும்.
4. புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60 சதவீதம்தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும்.
5. திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும் போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.
அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்
1. திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
2. திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
3. மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி ஆகியவைகளை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.
4. ஏற்கெனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.
என தயாரிப்பாளர்களிடமும், அரசிடமும் கேட்டுள்ளார்கள்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் பொதுச் செயலாளருமான ரோகிணி பன்னீர்செல்வம் கூறுகையில், ‛‛பிரபல இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்களை வைத்து மட்டும் வருடத்துக்கு ஒரு படம் எடுக்காமல், புதுமுக நடிகர்களை வைத்து வருடத்துக்கு நான்கைந்து படங்கள் கொடுத்தால், திரையரங்குகள் செழிப்பாக இருக்கும். அதேப்போன்று முன்னணி நடிகர்கள் ஒரு வருடத்தில் இரண்டு படங்களில் நடிக்க வேண்டும். அனைத்து விதமான டிக்கெட் கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி வரியாக 12 சதவீதம் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்க கொண்டுள்ளார்கள். அதேப்போல், ஐபிஎல் போட்டிகளை நிறைய பேர் பெரிய திரையில் காண தயாராக உள்ளனர். அதனால், ஐபிஎல், உலக கோப்பை கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்றவைகளை ஒளிபரப்ப எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்'' என்றார்.
திரையரங்கு உரிமையாளர்கள் இந்த கோரிக்கைகளை தயாரிப்பாளர்கள், தமிழக அரசு, மத்திய அரசு ஆகியோர் எந்த விதத்தில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.