நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
இயக்குனர் வசந்த பாலன் தமிழில் வெயில், காவியத் தலைவன், அங்காடித் தெரு போன்ற மாறுபட்ட யதார்த்த கதை களங்களை கொண்ட படங்களை இயக்கி சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள இயக்குனராக உள்ளார். தற்போது அர்ஜுன் தாஸ், துஷரா விஜயன் நடிப்பில் அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஜூலை 21ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக வசந்த பாலன் சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜுன் தாஸ் குறித்து கூறியதாவது : " அர்ஜுன் தாஸிடம் நிறைய திறமைகள் உள்ளது. எதிர்காலத்தில் பெரிய நடிகராக வலம் வருவார் . அவர் எதாவது விழாவில் பேசும்போது அங்கு உள்ள பெண்கள் கத்துகிறார்கள். இன்னும் அவரை பேச சொல்லி கேட்க்கிறார்கள். அர்ஜுன் தாஸை இந்த காலத்து ரகுவரன் என்று சொல்லலாம்" என இவ்வாறு தெரிவித்துள்ளார் .