நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சீதா ராமம் படத்தின் மூலம் பிரபலமானவர் மிருணாள் தாகூர். தற்போது தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வருகிறார். விரைவில் தமிழில் நடிக்க போகிறார். சமீபத்தில் ஹிந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற வெப்தொடரில் கவர்ச்சியாக நடித்தார். மேலும் சமூகவலைதளங்களிலும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம் உருவாகி உள்ளது.
மிருணாள் தற்போது நானி, விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். சீதா ராமம் என்ற ஒரு வெற்றி படத்திற்கு பிறகு அவரது சினிமா வாழ்க்கை மாறியுள்ளது. சீதா ராமம் படத்திற்கு அவர் ரூ.80 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார். தற்போது அவருக்கான வரவேற்பு அதிகம் இருப்பதால் இப்போது தனது சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.