கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி |
தமிழ் சினிமாவின் இரண்டு படங்கள் வரும் வாரம் ஜுலை 14ம் தேதி தெலுங்கில் நேரடியாக மோதிக் கொள்ள உள்ளன. மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'மாமன்னன்' படம் தெலுங்கில் 'நாயகுடு' என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதே பெயரில் மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், சரண்யா நடித்த 'நாயகன்' படம் 1987ம் ஆண்டு வெளிவந்தது. அதே பெயரை 'மாமன்னன்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக வைத்துள்ளார்கள்.
மடோன் அஷ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின், சரிதா மற்றும் பலர் நடித்துள்ள 'மாவீரன்' படம் ஜுலை 14ம் தேதி வெளியாக உள்ளது. தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கில் இப்படத்தை 'மகாவீருடு' என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். 'மாவீரன்' என்ற பெயரில் ரஜினிகாந்த் நடிக்க 1986ம் ஆண்டில் ஒரு படம் வெளிவந்தது. ராஜசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த அந்தப் படம் ஹிந்தியில் வெளியான 'மர்த்' படத்தின் ரீமேக். ஆனால், 'மர்த்' ஹிந்திப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
பழைய தமிழ்ப் பட பெயரை வைத்து 'மாவீரன்' படம் தமிழிலும், பழைய தெலுங்குப் பட பெயரை வைத்து 'மாமன்னன்' படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இரண்டு படங்களில் எந்தப் படத்தை தெலுங்கு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.