ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின் கமலின் அடுத்தடுத்த படங்களின் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து பிரபாஸ் உடன் புரொஜெக்ட் கே படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க போகிறார். இதுதவிர மணிரத்னம் உடன் ஒரு படம் பண்ண போகிறார். வினோத் இயக்கத்தில் கமல் நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாக இவர்கள் இணையும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கமலின் 233வது படமாக உருவாக உள்ள இதை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விவசாயம் தொடர்பான கதையில் இவர்களின் படம் இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் தற்போது படம் பற்றிய அறிவிப்பை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் மிரட்டும் பின்னணி இசையுடன் கமல் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்க, பின்னணியில் சிவப்பு வண்ணம் நிறைந்து உள்ளன. மேலும் படத்தின் தலைப்புக்கு கீழ் 'Rise to rule' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கையில் இந்த படம் விவசாயத்துடன் அரசியல் தொடர்பான கதைக்களத்திலும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தியன் 2 மற்றும் பிரபாஸ் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல் பங்கேற்க உள்ளார்.