நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் டத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சமூக ஆர்வலர்களிடம் மற்றும் அரசியல் பிரமுகரிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது.
லியோ படத்தின் வியாபாரம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமை, கர்நாடக மற்றும் கேரளா தியேட்டர் உரிமை வியாபாரம் ஆனதை தொடர்ந்து இப்போது தமிழ்நாடு தியேட்டர் உரிமைக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் முன்னிலையில் உள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். இவர்கள் தான் விஜய்யின் அடுத்து படத்தை தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லியோ படத்தின் தமிழ்நாடு உரிமையை ரூ.100 கோடிக்கு விலை சொல்வதாக கூறப்படுகிறது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் அதை விட ரூ.20 கோடி அளவிற்கு குறைத்து கேட்கிறார்களாம். இதனால் தமிழக வியாபாரத்தில் இழுபறி நீடிக்கிறது. ஒருவேளை எல்லாவற்றையும் மீறி ரூ.100 கோடிக்கு மேல் படம் வியாபாரம் ஆனால் தமிழ் சினிமாவில் அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்ற பெருமை லியோவை சாரும் என்கிறார்கள்.