ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் | ''அனைவரும் நல்லா இருக்கணும்'' - ரஜினி பொங்கல் வாழ்த்து |

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. அங்குள்ள பரோ தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அங்கு அவர்கள் பொதுவெளியில் அமர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியது, போட்டில் சென்றது, மலைப்பகுதிக்கு சென்றது, கப்பலில் பயணித்தது, குடும்பமாக டிரக்கிங் சென்றது, உணவருந்தும் புகைப்படம், படகு சவாரி என பல புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக ஜோதிகா வெளியிட்டுள்ளார்.