அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மாமன்னன் படத்தை அடுத்து ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த நிலையில் உதயநிதியுடன் இணைந்து தான் நடித்துள்ள மாமன்னன் படத்தில் அவர் கம்யூனிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். இது குறித்த தகவல்கள் வெளியாகி வரும் இந்த நேரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்ததின் பேரில் விரைவில் கீர்த்தி சுரேஷ் திமுகவில் இணையப்போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஆந்திராவில் உள்ள ஒரு கட்சியில் கீர்த்தி சுரேஷ் இணைய போவதாக முன்பு ஒரு செய்தி வெளியானது. பின்னர் பாஜகவில் அவர் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் தரப்பு அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்
இந்நிலையில் மீண்டும் அவர் அரசியலில் இணைய போவதாக செய்தி பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ் இதுபற்றி எந்த பதிலும் கொடுக்கவில்லை, ஆனால் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி மட்டுமே, கீர்த்திக்கு அரசியல் ஆசை எல்லாம் இப்போது இல்லை என்கிறார்கள்.