ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
ரஜினி நடித்த பேட்ட படத்தில் தமிழுக்கு வந்த மாளவிகா மோகனன், அதன்பிறகு மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து வருகிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக ஒவ்வொரு நாளும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து வருகிறார். அதோடு பல தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது தனது நண்பர் அபினவ் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
அதில், இதுபோன்ற நட்பு கனவில் மட்டும் தான் கிடைக்கும். அந்த அளவுக்கு எப்பொழுதும் என் பின்னால் என்னை தாங்கி பிடித்து வருகிறார். மோசமான நாட்களில் எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். சிறிது நேரம் என் முகத்தைப் பார்த்தாலே மனநிலையை புரிந்து கொள்வார். பிரச்னைகள் இருப்பதை அறிந்தால் பாதி உலகை கடந்து வருவார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபினவ் என்று வாழ்த்து தெரிவித்து அவருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா மோகனன்.