அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரத்தில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இந்த நிறுவனத்திடம் இருந்து 15 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்திருப்பதாக அவர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடத்தில் அந்த நிறுவனத்தைச் சார்ந்த ரூசோ என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 500 பேர்கள் இடத்தில் சம்மன் அனுப்பி நடத்திய விசாரணையில், அவர்களிடத்தில் இருந்து 800 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆருத்ரா மோசடி விவகாரம் அம்பலத்துக்கு வந்த போது அது சம்பந்தப்பட்ட பலர் தலைமறைவாகிவிட்ட நிலையில், நடிகர் ஆர்.கே .சுரேஷ் கடந்த ஐந்து மாதங்களாக நாடு திரும்பாமல் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.