கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
கடந்த 2021ம் ஆண்டு உடன்பிறப்பே என்ற தனது ஐம்பதாவது படத்தில் நடித்த ஜோதிகா, அதையடுத்து மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து காதல் தி கோர் என்ற படத்தில் நடித்திருப்பவர், இரண்டு ஹிந்தி படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்திய அளவில் பல மொழிகளிலும் பரவலாக நடிக்க தொடங்கிவிட்ட ஜோதிகா, தனது உடல் கட்டையும் கட்டுக்கோப்பாக்கும் முயற்சிகளிலும் தீவிரமடைந்து இருக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே தான் தீவிரமான ஒர்க்-அவுட் செய்த ஒரு வீடியோ வெளியிட்டிருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் ஜிம்மில் பளு தூக்குதல் போன்ற கடினமான உடற்பயிற்சிகளை தான் செய்யும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 45 வயதில் இப்படி வெறித்தனமாக ஜோதிகா வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோவுக்கு ரசிகர்கள் பெரிய அளவில் லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து வருவதை தொடர்ந்து நடிகர்கள் சரத்குமார், மாதவன் மற்றும் நடிகைகள் ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரும் கமெண்ட் கொடுத்துள்ளார்கள்.