பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கார் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். கடந்த வாரத்தில் திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் படத்தில் சித்திரிக்கப்பட்ட ராமன், ஹனுமன் ஆகியோரின் உருவத்தோற்றம், வசனம் உள்ளிட்டவைகள் சர்ச்சைகளில் சிக்கியதால் ஒரு தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியது. இருப்பினும் முதல் மூன்று நாட்கள் வசூல் நன்றாக இருந்தது.
அதன் பிறகு வசூல் சற்றென்று சரிய தொடங்கியது. மூன்று நாட்களில் ரூ.346 கோடி வசூலை எட்டிய இப்படம் 6 நாட்களில் ரூ. 410 கோடி வசூலை மட்டுமே எட்டியது. இதனால் ஹிந்தி, தெலுங்கில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். இதனிடையே படத்தின் வசூல் குறைந்த நிலையில் இன்றும், நாளையும் (ஜூன் 22 மற்றும் 23) ஆதி புருஷ் படத்திற்கான டிக்கெட் விலையை ரூ.150ஆக குறைத்துள்ளனர். ஆனால் இந்த விலை குறைப்பு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்துள்ளனர்.