விஷாலுக்கு ஜோடியாகும் துஷாரா விஜயன் | 'பேடி' படத்தின் புதிய அப்டேட் | தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! |
பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லெட்சுமணன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது கால் விரலில் ஏற்பட்ட காயம் அதிகமாகி விட்டதால் கால் கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இது திரை துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், தன்னால் முடிந்த அளவிற்கு ரூ.30 ஆயிரம் வழங்கி சிகிச்சைக்கு உதவியுள்ளார். அப்போது பாலா, ‛‛ஒரு லட்சம் ரூபாய் உங்களுக்கு உதவி செய்யலாம் என்று இருந்தேன். ஆனால், எனது பேங்க் அக்கவுண்டில் ரூ.32 ஆயிரம் மட்டுமே இருந்தது. அதனால், 2,000 ரூபாய் பெட்ரோல் செலவுக்கு வைத்துக் கொண்டு, மீதி ரூ.30,000ஐ உங்களுக்கு எனது அன்பின் அடையாளமாக கொடுக்கிறேன்'' எனக் கூறி நிதியுதவி அளித்தார். அப்போது மாயி படத்தில் பாவா லெட்சுமணன் - வடிவேலு இணையினரின் ‛வாம்மா மின்னல்' காமெடியை நடித்து பேசிக்காண்பித்தார் பாலா.
அதேபோல், நடிகர் தாடி பாலாஜியும், மருத்துவமனைக்கு நேரில் சென்று பாவா லெட்சுமணனிடம் நலம் விசாரித்ததுடன், அவருக்கு நிதி உதவியும் வழங்கினார். இது குறித்து பாலாஜி கூறுகையில், ‛எங்கள் கலைத்துறையின் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் அண்ணண் பாவா லட்சுமணன் அவர்களுடைய உடல் நிலை பாதிப்பைக் குறித்து எனக்கு தெரிந்ததும் மிகவும் வருந்தினேன். தற்ப்போது நேரில் சென்று அண்ணனை பார்த்து உடல் நலம் பற்றி மருத்துவர்கள் கூறிய ஆலோசனைகளையும் கேட்டறிந்து, எந்த உதவி தேவைப்பட்டாலும் என்னை தொடர்பு கொள்ளும்படி கூறி இருக்கிறேன்' என்றார்.
பாவா லெட்சுமணன், பல முன்னணி நடிகர்கள் மற்றும் வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களுடன் நடித்திருந்தாலும், அவர்களில் யாருமே இவரது சிகிச்சை மற்றும் பொருளாதாரத்திற்கு உதவாத நிலையில், அவருடன் எந்தவொரு படத்திலும் இணைந்து நடித்திராத சின்னத்திரை காமெடி நடிகர் பாலா, ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியதை பலரும் பாராட்டியுள்ளனர்.