இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'கருப்பு'. இந்த படத்தில் அவருடன் திரிஷா, சுவாசிகா, காளி வெங்கட், நட்டி நடராஜ் ,சிவதா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாய் அபியங்கர் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு கருப்பு என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று தன்னுடைய பிறந்தநாளில் ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்நிலையில் இன்று அவர் தனது சமூக வலைதளத்தில் இன்னொரு செய்தியும் வெளியிட்டு இருக்கிறார். அதில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருப்பவர், கருப்பு படத்தின் மிகப்பெரிய விருந்து அடுத்த மாதம் காத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாதம் 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதைத்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் ஆர். ஜே. பாலாஜி.