'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் |
நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ஒன்பதுல குரு படம் 300 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகியிருக்கிறது. இப்படத்தில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். கே இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
ஒன்பதுல குரு படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர்நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனும் இதில் அலையாத சும்மா சும்மா பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.