தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
1991ம் ஆண்டு இந்தியாவின் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர், சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்டது. பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் என்ற திறந்தவெளி திரையரங்கம், அடுத்து ஆராதனா என்ற உட்புற திரையரங்கம் திறக்கப்பட்டது. காரில் நேரடியாக பிரார்த்தனா தியேட்டருக்குச் சென்று காரில் இருந்தபடியும், பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தும், பாயைப் போட்டு படுத்தபடி, மிகப் பெரும் திரையில் படம் பார்ப்பது சென்னைவாசிகளுக்கு புது அனுபவமாக இருந்தது.
கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களில் சினிமா தொழிலும் ஒன்றாக இருந்தது. பல தியேட்டர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அப்படி பாதிப்பை சந்தித்த தியேட்டர்களில் பிரார்த்தனா தியேட்டரும் அமைந்தது. கடந்த நான்கு வருடங்களாகவே அந்தத் தியேட்டர் மூடப்பட்டுக் கிடந்தது. இப்போது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று அந்தத் தியேட்டர் இருந்த இடத்தை வாங்கி அங்கு வீடுகளைக் கட்ட உள்ளது. அதற்காகத் தியேட்டர்களை இடிக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
சென்னை, மாம்பலம் பகுதியில் இருந்த பழமையான ஸ்ரீனிவாசா தியேட்டரையும் அதே கட்டுமான நிறுவனம் வாங்கிவிட்டதாம். அந்தத் தியேட்டரில்தான் அஜித், ஷாலினி நடித்த 'அமர்க்களம்' படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது.
ஒரு பக்கம் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டு வந்தாலும் மற்றொரு பக்கம் ஷாப்பிங் மால்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் புதிது புதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென்னிந்திய சினிமாவுக்கே தலைநகராக விளங்கிய சென்னையில் இருந்த ஒரே ஒரு டிரைவ் இன் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ரசிகர்களுக்கு வருத்தமான செய்திதான்.