ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
சின்னத்திரையில் நடித்து வந்த கவின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையிலும் பயணித்து வருகிறார். லிப்ட் படத்தில் நாயகனாக நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த டாடா படம் வரவேற்பை பெற்றது. அடுத்து நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வந்தது. இந்நிலையில் சத்தமின்றி ஒரு புதிய படத்தில் கவின் நடித்து வருகிறார்.
இளன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கவின் இதுவரை 9 நாட்கள் படப்பிடிப்பில் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக இந்த ஸ்டார் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பதாக இருந்து போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் அந்தப்படம் அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. இப்போது அதே படத்தை கவினை வைத்து இயக்குகிறாராம் இளன். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.