175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் திருமணம் செய்து பிரிந்து சென்ற பின் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்கிற ரேஞ்சில் சித்தரித்து வீடியோ வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை அம்பலப்படுத்தினார். அதன்மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண் வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார்.
இந்நிலையில், பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில், சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை பொய்யான நரக வாழ்க்கை என்றும், அதிலிருந்து தன்னை இயற்கையும் இறைவனும் மீட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த கடினமான தருணத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் ஆதரவு தெரித்து வருவதுடன் விஷ்ணுகாந்த் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.