லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிபோடிக்கான பட்டியலில் அக்ஷயா, ஜீவன் பத்ககுமார்,புருஷோத்தமன், லக்ஷனார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாகார்ஜுனா இடம்பெறவில்லை. நாகார்ஜுனா ஏழ்மையான மீனவ குடும்பத்தில் பிறந்தவர். லுங்கி அணிந்து மேடையேறிவர். கேள்வி ஞானத்தில் மட்டுமே பாடல் பாடும் திறமையை வளர்ந்து கொண்டவர். அதேசமயம் அவர் பாடுவதை பார்த்து ஹரிஹரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களே அசந்து போய் பாராட்டியுள்ளனர். மேலும், மக்களின் ஆதரவும் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், அவர் பைனல் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு நபர் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்றால் அதற்காகவே அவருக்கு பைனலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்! என மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகார்ஜுனா பைனலில் பாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை என்றாலும், 5-வது பைனலிஸ்டாக அவர் கட்டாயம் இடம்பெறுவார் என மக்கள் நம்பி வருகின்றனர்.