சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தனது 234வது படத்தில் நடிக்க போகிறார். நாயகன் பாணியில் இந்தப்படம் இருக்கும் என சமீபத்தில் கமல் தெரிவித்து இருந்தார். இதற்கிடையில் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ப்ராஜெக்ட் கே. ஹீரோவாக பிரபாஸ் நடித்து வருகிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி வருகிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், இதற்காக பல கோடி சம்பளம் வழங்க உள்ளதாகவும் டோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.