சிம்புவின் இரண்டு படங்களுக்கு இசை சாய் அபயங்கர்? | இன்று 'அமரன்' 100வது நாள் விழா | இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் |
தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம்தான் முதலிடத்தில் உள்ளது. அப்படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். அந்தப் படத்தின் வசூல் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் இருக்கிறது.
கடந்த வருடம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் 500 கோடிக்கும் கூடுதலான வசூலுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து கடந்த மாதம் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் பாகத்தின் வசூலையே முறியடிக்க முடியாமல் இரண்டாம் பாகத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சில பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த வசூலை வேறு எந்தப் படமும் முறியடிக்கக் கூடாது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் பேராசையாக இருக்கும். கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'விக்ரம்' படம் தமிழக வசூலில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்த் அவர் நடித்து அடுத்தடுத்து வெளிவரும் படங்களின் மூலம் முறியடிப்பார் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு '2.0' படத்தின் வசூல் முறியடிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.
அதை ரஜினிகாந்த்தே அவருடைய அடுத்தடுத்த படங்களில் முறியடிப்பாரா, அல்லது '2.0' படத்தை இயக்கிய ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும 'இந்தியன் 2' படம் முறியடிக்குமா, அல்லது வேறு படங்கள் முறியடிக்குமா என்பதற்கு சற்றே பொறுமை காக்க வேண்டும்.