பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
ஹிந்தி நடிகர் நிதீஷ் பாண்டே(51). ரங்கூன், ஹன்டர், தபாங் 2, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அனுபமா என்ற தொடரில் தீரஜ் கபூர் என்ற வேடத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.
மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்ற ஊரில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் நிதீஷ். வெகுநேரம் ஆகியும் அவர் அறை திக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்களின் உதவியோடு அறை திறக்கப்பட்டது. அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் பாண்டேவின் மரணம் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.