சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

நடிகர் ரஜினிகாந்த் , தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, கன்னட நடிகர் சிவராஜ் குமார் இவர்கள் மூவரும் தவிர்க்க முடியாத இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அந்த தகவல்களின் படி, ஒரு புகழ்பெற்ற கன்னட இயக்குனர் இயக்கத்தில் இவர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரமாக சிவராஜ் குமார் நடிக்கிறார். சிறிது நேரம் மட்டும் பாலகிருஷ்ணா நடிப்பார் என்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




