காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தென்னிந்திய சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் சரத்பாபு. கடைசியாக தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்தார். செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சரத் பாபு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மே 22 ஆம் தேதியான நேற்று மதியம் அவர் மரணம் அடைந்தார். ரத்பாபு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர். ஆனபோதும் அவருக்கு வாரிசு இல்லை. ஆந்திராவில் உள்ள ஹார்சலி ஹில்ஸ் என்ற பகுதியில் வீடு கட்டி தனது கடைசி காலத்தை அங்கு செலவிடுவதற்கு திட்டமிட்டிருந்தார் சரத்பாபு. இதற்காக அங்கு இடம் வாங்கி வீடும் கட்டி வந்தார். ஆனால் அந்த வீட்டை கட்டி முடிப்பதற்குள்ளே அவர் இறந்து விட்டார். அந்த வகையில் சரத் பாபுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. ஏற்கனவே தனது இளமைகாலத்தில் போலீஸாக வேண்டும் என விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த கிட்டப்பார்வை பிரச்னையால் அது நடக்காமல் போக, சினிமாவில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.