பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.பி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு. உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் நேற்று காலமானார். தெலுங்கு பிலிம் சேம்பரில் நேற்று அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. தெலுங்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது. இங்கு அவரின் தி.நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
ரஜினி, ஒய்.ஜி. மகேந்திரன், சுஹாசினி, சரத்குமார், ராதிகா, சுரேஷ் கிருஷ்ணா, பாக்யராஜ், சூர்யா, கார்த்தி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் சரத்பாபுவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
செந்தாழம்பூவில் வந்தாண்டிய தென்றல் என பாடியவர் காற்றில் கரைந்து போனார்.