பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… | சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி | 'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா |

இசை அமைப்பாளர் தேவாவுடன் மேடை கச்சேரிகளில் கீ போர்ட் வாசித்து வந்த அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா பாண்டியராஜன் இயக்கிய 'டபுள்ஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி, சாணக்யா, தலைமகன், ஆழ்வார், பழனி, வைத்தீஸ்வரன், நேபாளி, பாண்டி, துள்ளி விளையாடு, பூலோகம், ஆதார், தெற்கத்தி வீரன் உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
ஆரம்பகால கட்டத்தில் பெரிய ஹிட்களை கொடுத்த ஸ்ரீகாந்த் தேவா அதன்பிறகு ஏனோ இசையில் பெரிதாக சாதிக்கவில்லை. பட வாய்ப்புகளும் குறைந்தது, சிறிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைத்து வந்தார். இந்த நிலையில் அவர் 100 படங்களுக் கு இசை அமைத்து முடித்துள்ளார். அவர் இசை அமைத்துள்ள 100வது படம் 'பிரியமுடன் ப்ரியா'. கோல்டன் மூவீஸ் சார்பில் ஏ.ஜே.சுஜித், தயாரித்து, இயக்கி உள்ளார். முருகா அசோக் நாயகனாகவும், லீசா நாயகியாகவும் நடித்துள்ளனர். ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீகாந்த் தேவா பேசியதாவது: எங்கள் குடும்பம் இசை குடும்பம் என்றாலும் எனக்கு இசை ஆர்வம் இல்லை, படிப்பிலும் ஆர்வம் இல்லை. அப்பா, சித்தப்பா இசை வாசிப்பதை வேடிக்கை பார்ப்பேன். திடீரென்று ஒரு நாள் அப்பா நீ படித்து என்னவாக போகிறாய் என்று கேட்டார். படிப்பில் இருந்து தப்பிக்க எனக்கு படிப்பு வரமாட்டேங்குது எனக்கு கீ போர்ட் வாங்கித் தாங்க நான் கீபோர்ட் பிளேயராகப்போறேன் என்றேன். உங்க பெயரையும் காப்பாற்றுவேன் என்றேன். சரி உனக் கு எது பிடிக்குதோ அதைச் செய் என்று சொல்லி அப்போதே காஸ்ட்லியான கீ போர்ட் வாங்கித் தந்தார். அப்பா பெயரை ஓரளவுக்கு காப்பாற்றி விட்டதாக நினைக்கிறேன். எனக்கு அவர் அப்பா மட்டுமல்ல காட்பாதர்.
முதல் பட வாய்ப்பு கொடுத்த பாண்டியராஜன் சார், விஜய் பட வாய்ப்பு கொடுத்த பேரரசு சார். எனக்கு மானசீக குருவாக இருந்த இளையராஜா சார், கங்கை அமரன் சார், நேரடி குருக்களாக இருந்த அப்பா, சித்தப்பா, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பளார்கள், இயக்குனர்கள், சக இசை கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.