தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' | மூத்த நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் “டான்ஸ் டான்” விழா | மழையில் மூழ்கிய செட்டுகள் : இனி எப்போது ஷூட்டிங்? | “ரசிகர்களின் ரசனைமிகு வில்லன்” நடிகர் ரகுவரன். | 'ரொம்ப வலிக்குது' : மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம் |
'தரமணி' படத்தின் மூலம் அறிமுகமான வசந்த் ரவி அதன் பிறகு 'ராக்கி' படத்தில் நடித்தார். தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜூடன் நடித்த 'வெப்பன்' படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையில் வசந்த்ரவி நடித்த படம் தான் 'அஸ்வின்'. இத்திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் தருண் தேஜா இயக்கியுள்ளார்.
வசந்த் ரவியுடன், விமலா ராமன், முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப் மற்றும் மலினா நடித்துள்ளனர். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசையமைத்திருக்கிறார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வாங்கி உள்ளது. வருகிற ஜூன் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுகிறது. அதேபோல ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட் பிளிக் ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இரண்டு உரிமத்தின் அடிப்படையில் படம் டேபிள் பிராபிட் அடைந்துள்ளது என படத் தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.