பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய் நடித்த குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, அதன் பிறகு அவர் நடித்த நண்பன், மெர்சல், வாரிசு போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதில், மெர்சல் படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திலும் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது மார்க் ஆண்டனி, கேம் சேஞ்சர், ஜிகர்தண்டா-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் விஜய்யின் 68வது படத்திலும் அவரை வில்லனாக நடிக்க வைக்க அவரிடத்தில் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.