மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் | இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' |

உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான ஒரு விழா கேன்ஸ் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள், திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது.
அந்த விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். 'தேவதாஸ்' படத்திற்கான திரையிடலில் முதன் முதலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய் இந்தாண்டு வித்தியாசமான ஆடை ஒன்றை அணிந்து 'ரெட் கார்ப்பெட்'டில் அசத்தியுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆடை வடிவமைப்பாளரான ஏக லகானி வடிவமைத்துள்ள அந்த ஆடை அலுமினியம் மற்றும் கிரிஸ்டல் கலந்து உருவாக்கப்பட்ட ஆடை. சோபி கோச்சர் என்ற நிறுவனத்தின் வெளியீடாக கேன்ஸ் விழாவில் அந்த சில்வர் நிற ஆடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடலை முழுவதுமாக மறைத்திருக்கும் அந்த ஆடையில் ஐஸ்வர்யா ராயின் முகத் தோற்றமும், அவரது கண்களும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளாக நிறைந்துள்ளது.