கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
100 நாட்கள் என்பதே அரிதாகிப் போன இந்தக் காலத்தில் ஒரு படம் 50 நாளைத் தொடுவதே ஒரு சாதனைதான். தியேட்டர்களில் ஓடாத சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கே 50வது நாள் போஸ்டர்கள் வெளியிடும் இந்தக் காலத்தில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் ஓடி 50 நாளைக் கடந்தாலும் அது சிறப்பே.
வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இன்று 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
படம் வெளியான போது விமர்சகர்களின் வரவேற்பும், ரசிகர்களின் வரவேற்பும் படத்திற்கு அதிகமாகவே இருந்தது. அதே சமயம் படத்தின் கதையைப் பற்றியும், கதாபாத்திரங்களைப் பற்றியும் சில சர்ச்சைகள் எழுந்தது.
பின் ஓடிடி தளத்தில் வெளியான பின் குறுகிய காலத்தில் அதிக நிமிடங்கள் பார்க்கப்பட்ட படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. ஓடிடியில் வெளிவந்த பின்பும் தியேட்டர்களில் ஓடுவதும் பெருமைதான். இந்த வருடத்திலேயே இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில காட்சிகளை தற்போது படமாக்கி வருவதாகவும் தகவல்.