'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் விருமன், பொன்னியின் செல்வன் 1, மற்றும் சர்தார் என மூன்று படங்கள் வெளியாகி மூன்றுமே வெற்றியை பெற்றன. இதில் சர்தார் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது. இந்த வருடம் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி உள்ள நிலையில், தற்போது அவர் நடித்து வரும் ஜப்பான் திரைப்படத்தையும் சென்டிமென்ட்டாக இந்த வருட தீபாவளி ரிலீஸ் ஆக வெளியிட திட்டமிட்டு அறிவிப்பும் செய்திருந்தனர்.
அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுளக்ஸ் ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதை உறுதி செய்து விட்டன. அதுமட்டுமல்ல இந்த தீபாவளி ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி நான்கு முனை போட்டி இருந்தால் நிச்சயம் எதிர்பார்த்த அளவு திரையரங்குகளும் எதிர்பார்த்த வசூலும் கிடைக்காது என்பதை கணக்கில் கொண்டு தீபாவளி ரிலீஸ் என்கிற திட்டத்தை மாற்றி, அதற்கு முன்பாக செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு ஜப்பான் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம்.
அதற்கு முன்னதாகவே ஜெயிலர் திரைப்படமும் அதற்கு பின்னர் அக்டோபரில் தான் விஜய்யின் லியோ திரைப்படமும் வெளியாக இருப்பதால் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ரிலீஸின்போது ஜப்பான் படத்திற்கு மிகப்பெரிய போட்டி இருக்காது என்பதால் இந்த முடிவை எடுத்து உள்ளார்களாம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.