ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
தமிழில் வெளியான அரண்மனை, காஞ்சனா போன்று ஹாலிவுட்டில் தற்போது தயாராகி உள்ள படம் ஹான்டட் மேன்ஷன். அதாவது பேய் மாளிகை. இது ஒரு சூப்பர் நேச்சுரல் திகில் படம். ஜஸ்டின் சிமியன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் லகீத் ஸ்டான்ஃபீல்ட், டிப்பனி ஹடிஷ், ஓவன் வில்சன், டேனி டிவிட்டோ, ரொசாரியோ டாசன், டான் லெவி, ஜேமி லீ கர்டிஸ் மற்றும் ஜாரெட் லெட்டோ ஆகியோர் நடித்துள்ளனர். வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் மற்றும் ரைட்பேக்நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் இதே தலைப்பில் 2003ம் ஆண்டு வெளியான படத்தின் தொடர்ச்சியாக அதாவது இரண்டாவது பாகமாக உருவாகி உள்ளது. படத்தின் நாயகி தன் வீட்டில் பல பேய்கள் வாழ்வதை அறிந்து அவற்றை விரட்ட ஒரு மந்திரவாதிகள் கூட்டத்தை அழைத்து வருகிறார். அவர்கள் அரைகுறை மந்திரவாதிகள், அவர்களின் காமெடியான காரியங்களால். பேய்களுக்கும், அவர்களுக்கும் இடையில் நடக்கும் காமெடி விளையாட்டுகள்தான் கதை. இந்த படம் வருகிற ஜூலை 28ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.