லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்து சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் விஸ்காம் படித்த ஸ்ருதி ரெட்டி, மாடல் அழகியாக வாழ்க்கையை துவக்கினார். பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா புரட்சி' என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்தார். தற்போது அவர் 'விசாரணை கைதி' என்ற படத்தில் வழக்கறிஞராகவும், நட்டி நட்ராஜ் ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் சிக்கி கைதான விசாரணை கைதிக்கு ஆதரவாக வாதாடி அவரை காப்பாற்றும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.
“சினிமா நடிகை ஆகும் கனவுடன்தான் சென்னையில் படித்தேன். சிறிய தேடலுக்கு பிறகு ‛மெரினா புரட்சி' வாய்ப்பு கிடைத்து. இந்த படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமானேன். என்றாலும் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை விசாரணை கைதி தந்துள்ளது. இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும். தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனர்களின் நடிகையாக நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே தனது கனவு” என்கிறார் ஸ்ருதி ரெட்டி.