மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

இதுவரை ரொமாண்டிக், காமெடி மற்றும் பேமிலி சென்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த அசோக் செல்வன் தற்போது 'போர் தொழில்' என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுக்கிறார். இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். அசோக் செல்வனுடன் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
“தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதை. இளம் காவலராக அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன் மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். அந்த மூத்த காவலர் சரத்குமார். ஆக்சன், சஸ்பென்ஸ் திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்” என்கிறார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.




