பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'பருத்திவீரன்' படத்தில் 'பிணம் தின்னி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் செவ்வாழை ராசு. பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். 'கிழக்குச் சீமையிலே, மைனா, கந்தசாமி' உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த செவ்வாழை ராசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 70. செவ்வாழை ராசுவுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள கோரையூத்து கிராமத்திற்கு உடல் எடுத்து வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.