தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

கொரானோ தாக்கம் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உலகையே உலுக்கிய போது மக்கள் வீட்டிலேயே முடங்கினர். இந்தியாவில் தியேட்டர்கள் அனைத்துமே மூடப்பட்டன. பொழுதுபோக்கிற்காக ஓடிடி தளங்கள் பக்கம் மக்கள் சென்றனர். அதன்பின் ஓடிடி தளங்களுக்கான வரவேற்பு திடீரென உச்சத்தைத் தொட்டது. நேரடியாகவே ஓடிடி தளங்களில் புதிய படங்களின் வெளியீடு, தமிழில் புதிது புதிதாக வெப் தொடர்கள் என சினிமாவுக்குப் போட்டியாக ஓடிடி வளர ஆரம்பித்தது. கடந்த 2020ம் ஆண்டு 20க்கும் கூடுதலான படங்களும், 2021ம் ஆண்டு 40க்கும் கூடுதலான படங்களும், 2022ம் ஆண்டு 20க்கும் கூடுதலான படங்களும் ஓடிடியில் நேரடியாக வெளியாகின.
ஆனால், இந்த 2023ம் ஆண்டில் 5 மாதங்கள் வரையிலும் ஒரே ஒரு படம்தான் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. சர்ஜுன் கேஎம் இயக்கத்தில் கலையசரன், மிர்ணா மேனன் நடித்த 'புர்கா' படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அப்படத்தையும் முழுநீளத் திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. 1 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டுமே நேரம் கொண்ட படம் அது.
நாளை வெளியாக உள்ள 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' படத்தை வேண்டுமானால் இந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் முழு நீளத் திரைப்படம் என்று சொல்லலாம். 'கொன்றால் பாவம்' படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில் ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு விருப்பம் காட்டவில்லையா அல்லது தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் வெளியீட்டை மட்டுமே விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்படி குறைந்தால் அது ஓடிடி நிறுவனங்களுக்கான இழப்பாகத்தான் பார்க்கப்படும்.