தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் | மீண்டும் மல்டி ஸ்டார் படம் இயக்குகிறார் மணிரத்னம் | திருமணம் செய்து கொண்டு திருப்பதியில் செட்டிலாக ஆசைப்படும் ஜான்வி கபூர் | சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் |
2023ம் ஆண்டில் இதுவரையில் சுமார் 80 படங்கள் வரையில் வெளிவந்துள்ளன. இதில் பெரிய நடிகர்களின் படங்களும், அடுத்த கட்ட நடிகர்களின் படங்களும், புதுமுகங்களின் படங்களும் என இருக்கின்றன. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு வரவேற்பு இருக்கும். விமர்சன ரீதியாக படம் மோசனமான வரவேற்பைப் பெற்றிருந்தாலும் கூட அந்தப் படங்களை ரசிகர்கள் தியேட்டர்களில் போய் பார்த்து 100 கோடி, 200 கோடி, 300 கோடி என வசூலைக் கொடுத்துள்ளனர்.
இருந்தாலும் அப்படிப்பட்ட சில நூறு படங்களுக்குக் கிடைக்காத பெயரும், புகழும் சில சிறிய படங்களுக்குக் கிடைத்துள்ளன. அப்படியான படங்களாக இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த 50க்கும் மேற்பட்ட சிறிய படங்களில் மூன்றே மூன்று படங்கள் பாராட்டைப் பெற்றுள்ளன.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடித்து பிப்ரவரி 10ம் தேதி வெளிவந்த 'டாடா' மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி மற்றும் பலர் நடித்து மார்ச் மாதம் 3ம் தேதி வெளிவந்த 'அயோத்தி', விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் மே 12ம் தேதி வெளிவந்த 'குட் நைட்' ஆகிய மூன்று படங்களும் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த மூன்று படங்களின் 'கன்டென்ட்' களும் வித்தியாசமாக இருந்ததும், அதைச் சொல்ல வேண்டிய விதத்தில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சொன்னதே அந்தப் படங்களின் வரவேற்புக்கும் காரணம்.
இப்படங்களை இயக்கிய மூவருக்குமே அறிமுகப்படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 2023ம் வருடத்தின் முக்கிய படங்களில் இந்த மூன்று படங்களும் இடம் பிடிக்கப் போவது உறுதி.