குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் என்கிற திரைப்படம் வெளியானது. அவரது திரை உலக பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்று தந்தது. இந்த நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்க முடியாத சூழல் இருந்ததால் தானே இந்த படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படம் மே 19ம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் மாறிமாறி இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் விஜய் ஆண்டனி.
தமிழில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற போது இயக்குனர் சசி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “இந்த படத்திற்காக பல முன்னணி ஹீரோக்களை அணுகினேன். ஆனால் அவர்கள் அனைவரும் இதை ஒரு பிச்சைக்காரனின் கதையாக தான் பார்த்தார்கள். விஜய் ஆண்டனி மட்டும் தான் ஒரு பணக்காரனின் கதையாக பார்த்தார்” என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்போது ஹைதராபாத்தில் இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனியிடம் உங்கள் பார்வையில் தெலுங்கிலும் தமிழிலும் பிச்சைக்காரன் படத்திற்கு பொருத்தமான கதாநாயகர்கள் யார் என நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்த விஜய் ஆண்டனி, தெலுங்கில் மகேஷ்பாபுவும் தமிழில் நடிகர் விஜய்யும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபர்கள் என்று ஓபனாக கூறியுள்ளார்.
பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் பெற்ற வெற்றியை பார்க்கும்போது இப்படி ஒரு படத்தை முதலில் கதை சொல்லப்பட்ட அந்த முன்னணி ஹீரோக்கள் மிஸ் பண்ணி விட்டார்களோ என்று தான் தோன்றுகிறது.