மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகை அசின் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும், காதலனை சந்திப்பதற்காக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும். திருமணம் காரணமாகத்தான் புதிய படங்கள் எதிலும் அவர் நடிக்க வில்லை என்றும் பரபரப்பான செய்திகள் பரவியது. இதுகுறித்து அசின் வட்டாரங்களில் விசாரித்த தகவல் இது...
அசின் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அசினுக்கு கேரளாவில் சொந்தமாக நிறைய எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் ஒரு எஸ்டேட்டில் அசின் அணையே கட்டி உள்ளார். அதனால் அவருக்கு பணத்தின் மீது எப்போதும் ஆசை இருந்ததில்லை. அவருக்கு தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி மக்களிடம் புகழ்பெற வேண்டும் என்பதே குறிக்கோள்.
தமிழ், இந்தி மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டாலும் தான் இன்னும் ஒரு கமர்ஷியல் ஹீரோயினாக இருப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. வெயிட்டான ரோல்களில் நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். ஆனால் அவருக்கு வருகிற வாய்ப்பெல்லாம் கோடிக்கணக்கில் சம்பளம் தரும் கமர்ஷியல் கேரக்டர்கள்தான், அதனால் தான் அதனை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. தனது அடுத்த திட்டம் பற்றி யோசிப்பதற்கும், தன் பள்ளி பருவத்து தோழிகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும் அவர்களை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார். அங்கு தோழிகளுடன் தன் எதிர்கால திட்டம் குறித்து விவாதித்தார். அனைவரும் அசினின் எண்ணங்களையே பிரதிபலித்தனர். நடித்து பணம் சம்பாதிக்க வேண்டாம், புகழ் சம்பாதித்துக் கொள் என்பதே தோழிகளின் அட்வைசாகும்.
மேலும் அமெரிக்காவில் அசினுக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு அசின் அடிக்கடி செல்வதுண்டு. அதைத்தான் தவறாக புரிந்து கொண்டு வதந்தியை கிளப்பி இருக்கிறார்கள். அசின் அடுத்து தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதைப் பற்றி அந்த நிறுவனம் முறைப்படி அறிவிக்கும். என்கிறது அசின் வட்டாரங்கள்.
"துப்பாக்கி" வெற்றிக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் இணைகிறார்கள். இந்தி துப்பாக்கி முடிந்ததும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தமிழ் படத்தில் விஜய் ஹீரோ அசின் ஹீரோயின் என்பதும் படத்தின் பெயர் "மார்ச் 15" என்பதும் தற்போது கசிந்திருக்கும் செய்தி.