மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. முதன்முறையாக ஒரு முழுநீள பக்கா கிராமத்து கதையில் நாயகனாக நடிக்கிறார் ஆர்யா. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளனர் . இந்த படம் வருகின்ற ஜூன் 2ம் தேதி அன்று வெளியாகும் என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.