சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு மாவீரன் மற்றும் அயலான் படங்கள் வெளியாக உள்ளன. தற்போது தனது 21வது படத்திற்காக சில பயிற்சிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். மாவீரன் படம் வருகிற ஜூலை 14 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது அதே தேதியில் தனது ரசிகர்களுக்கு மற்றொரு விருந்து கொடுக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள படம் அயலான். சமீபத்தில் இப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். தற்போது இந்த படத்தின் டீசர் ரெடி ஆகியுள்ளது. அதனால் இந்த படத்தின் டீசரை மாவீரன் படம் வெளியாகும் தேதியில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் கலந்த படமாக அயலான் உருவாகி உள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸாகிறது.