ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
பாலிவுட் நடிகை வித்யாபாலன். தென்னிந்தியாவில் இருந்து சென்று பாலிவுட்டில் சாதனை படைத்தவர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் நடித்து தேசிய விருது பெற்றவர். கடைசியாக அவர் நடித்து தியேட்டரில் வெளியான படம் 'மிஷன் மங்கள்'. 2019ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு கொரோனா தொற்றால் அவரது படங்கள் தியேட்டரில் வெளியாகவில்லை.
'மிஷன் மங்கள்' படத்திற்கு பிறகு அவர் நடித்த சகுந்தலாதேவி, ஷெரின், ஜல்சா படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது அவர் நடித்து முடித்துள்ள 'நீயத்' என்ற படம் ஜூலை 7ம் தேதி தியேட்டர்களில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரைம் வீடியோ மற்றும் விக்ரம் மல்ஹோத்ரா தலைமையிலான அபுண்டாண்டியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தை அனு மேனன் இயக்கி உள்ளார். இது துப்பறியும் கிரைம் த்ரில்லர் படம்.
தற்போது மேலும் ஒரு இந்திப் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன், தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டவர் வித்யா பாலன். அந்த கோபத்தில் தமிழ் படத்தில் பல வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.