லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மேத்தியூ தாமஸ், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஏற்கனவே நட்சத்திர பட்டாளத்தை கொண்டுள்ள இப்படத்தில் தற்போது ஒரு மலையாள நடிகை இணைந்துள்ளார். மோகன்லால் நடித்த திரிஷ்யம்-2 படத்தில் பிரபலமான நடிகை சாந்தி மாயாதேவி இப்போது இந்த படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். இப்போது இவர் மோகன்லால் நடித்து வரும் ராம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.