படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்துள்ளார். அதேபோல் நடிகர் சிரஞ்சீவி உடன் ‛போலா சங்கர்' படத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் இடைவெளியில் திரைக்கு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா அவர் கூறியது: "திரையுலகின் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி இருவருடன் இணைந்து நான் நடித்துள்ள படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷமாக உள்ளது. பெரும்பாலும் ஹீரோக்கள் நடித்த படங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாவது அடிக்கடி நடந்துள்ளது. ஆனால் கதாநாயகிகளுக்கு அரிதாக தான் நடக்கும். எனக்கு இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழில் ரஜினி உடன் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்ட் 11ம் தேதியும் வெளியாக இருக்கிறது." என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார்.