'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் சிரஞ்சீவி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு ஆச்சார்யா, காட்பாதர் என இரண்டு படங்களில் நடித்தார் சிரஞ்சீவி. இதில் ஆச்சார்யா படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. காட்பாதர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. அதேசமயம் இந்தாண்டு துவக்கத்தில் அவர் நடிப்பில் வெளியான வால்டர் வீரய்யா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாக்கி வரும் போலோ சங்கர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.
வால்டர் வீரய்யா படத்தின் வெற்றிக்கு அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரவிதேஜாவும் இணைந்து நடித்திருந்தது முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இதை கவனத்தில் கொண்ட சிரஞ்சீவி அடுத்ததாக தன்னை தேடி வந்து சோக்காடே சின்னி நாயனா இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா குரசாலா சொன்ன கதையில் இன்னொரு இளம் நடிகருக்கான கதாபாத்திரமும் இருந்ததால் ரொம்பவே உற்சாகமாகி விட்டாராம். அந்த கதாபாத்திரத்தில் இளம் நடிகர் சித்து ஜொன்னலகடா நடிக்க உள்ளாராம். தனது அடுத்தடுத்த படங்களில் இப்படி இன்னொரு இளம் நடிகரும் நடிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள முடிவு செய்து விட்டாராம் சிரஞ்சீவி.